யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்கடி கடுமையாக தீவிரமடைந்து வந்த நிலையில் யுக்ரேனில் போரைத் தொடங்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு யுக்ரேனி எல்லைக்கு உள்பட்ட இரண்டு பிரிவினைவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை அவற்றின் தன்னாட்சி மிக்க பிரதேசங்களாக அங்கீகரித்துள்ளார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இந்த இரண்டு பகுதிகள். ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தனி குடியரசுகள் ஆக அழைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லுமாறு ரஷ்ய படைகளுக்கு புதின் உத்தரவிட்டுள்ளார். புதினின் இந்த அறிவிப்பால் மேற்கத்திய நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை அறிவிக்கக்கூடும்.