ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு காரணமான இரண்டு முக்கிய தேவைகளை ரணில் விக்ரமசிங்க பூர்த்தி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைதியான அரசியல் சூழலை முதலில் வழங்கியதாக பசில் ராஜபக்ஷ நேற்று தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.
“போராட்டத்தால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. அரசியல்வாதிகள் மீதும், அவர்களின் சொத்துக்களைத் தாக்கி, தீ வைத்து எரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இந்த நிலையை மாற்றினார்.
இரண்டாவது ரணில் விக்கிரமசிங்கவினால் எரிவாயு வெடிப்பு, எண்ணெய் வரிசைகள் மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது எனவும் பசில் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது இதுபோன்ற சமூகப் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவர் என்று நாங்கள் நம்பினோம், அதை அவர் நிரூபித்தார்.”
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தெரிவு சரியானது என்பதையே இது காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்