இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க கட்சித் தலைவர்களின் சிறந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.