சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.