ரெயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடைந்துள்ள போதிலும், ரயில் போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் உப தலைவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை ,ரெயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் மீண்டுமொருமுறை திடீர் பகிஷ்கரிப்பை ஆரம்பித்ததனால் தைப்பொங்கல் வைபவத்தை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக காத்திருந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார்கள்.
ரெயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு மத்தியில் ரெயில் சேவையை முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களை அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை மேற்கொண்டமையே இதற்கான காரணம் என்று ரெயில் நிலைய பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.