September 28, 2023 3:13 am
adcode

ருஹூணு தேசிய கல்வி பீட மாணவர்கள் மீது தாக்குதல்.

காலி அக்மீமன ருஹுணு தேசிய கல்வி பீடத்தில் நேற்று (26) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த பீடத்தில் முன்னர் கல்வி பயின்றவர்கள் மற்றும் தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினர் திடீரென விடுதிக்கு வந்து தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

நேற்று (26) சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீடத்தின் வேலியை உடைத்து உள்ளே நுழைந்ததாக ருஹுண விஞ்ஞான பீடத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share

Related News