October 2, 2023 10:27 pm
adcode

லங்கா சதொச நிறுவனங்களில் விசேட சலுகை விலையில் தண்ணீர் போத்தல்கள்.

அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு லங்கா சதொச தண்ணீர் போத்தல்களை விசேட சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் ஒன்றை மீள ஒப்படைக்கும் போது ஏற்கனவே அறவிடப்பட்ட 10 ரூபா மீள செலுத்தப்படும். இதற்கமைவாக 19 ரூபாவுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை லங்கா சதொச வலைப்பின்னல் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் இந்த 500 மில்லி லிட்டர் போத்தல் ஒன்று ரூபா 35 க்கு விற்பனை செய்யப்படும். பயன்படுத்தப்பட்ட போத்தலை மீள ஒப்படைக்கும் போது அதற்காக அறவிடப்பட்ட 10 ரூபாவை நுகர்வோருக்கு மீள பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

Share

Related News