March 24, 2023 5:28 am
adcode

விசா மோசடி: அதிகாரிகளிடமிருந்து முக்கிய முடிவு

உத்தியோகபூர்வமற்ற வழிகள் மூலம் பெற்ற நிதியை முடக்கும் நடவடிக்கைகளுடன் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், விசிட் விசாவில் தனிநபர்களை வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதைக் கண்டறிந்த 400 ஏஜென்சிகளுக்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு முறையற்ற வழிகளில் அனுப்பப்பட்ட பெண்கள், மற்றும் ஓமானில் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புள்ள பாலியல் கடத்தல் கும்பல் பற்றிய அறிக்கைகள் போன்ற பல குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“உண்டியல்” (அனுமதியற்ற பணப்பரிமாற்றம்) முறையின் ஊடாக பிரதிநிதித்துவ முகவர் நிலையங்கள் இலங்கைக்குள் தமது கமிஷனைப் பெறுவதாகவும், அத்தகைய வழிகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share

Related News