June 10, 2023 10:33 pm
adcode

விரைவில் புதிய வரவு செலவு திட்டம்! – நிதி அமைச்சர் அலி சப்ரி

இன்று (04) காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட உரையாற்றுகையில் 2022 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டம் இனி யதார்த்தமானது அல்ல என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையை இலங்கை உடனடியாக முகாமைத்துவப்படுத்த வேண்டும் எனவும், நாடு பேரழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு வருடங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை எனவும் சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தில் சேராதது உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

Share

Related News