விற்பனை முகவர்களிடமுள்ள மற்றும் வீடுகளில் உள்ள தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் முன்னர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டருடன் தொடர்புபட்ட சம்பவங்கள் குறித்து கண்டறிவதற்காக பேராசிரியர் சாந்த வல்பொலவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றமை குிப்பிடத்தக்கது.
குறித்த அறிககை இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.