September 26, 2023 8:28 pm
adcode

வெற்றி பெற்றால் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின்சாரத் தொகுதி – சஜித் பிரேமதாச

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர் வீடுகள் தோறும் சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படுமென கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்கு உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம் மின்சார சபை மூலம் பெறப்பட்டு அதற்கான பணம் வழங்கப்படும் என்றார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற சமகி ஜனபல வேகவின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபை வெற்றி பெற்றதன் பின்னர் அப்பகுதியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு இரண்டு பஸ்கள் வழங்கப்படும் எனவும், பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும் அன்றைய தினம் இரண்டு பஸ்களையும் தாம் இயக்கவுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

Share

Related News