இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் சக்திப் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2022 மார்ச் 17ஆம் திகதி இந்திய ஸ்டேட் வங்கி ஊடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த கடனுதவித் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுடன் அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப்பொருட்கள் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முன்னுரிமை அடிப்படையில் சீனி, பால்மா, கோதுமை, மருந்து, எரிபொருள் மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் ஆகியவையும் இக்கடனுதவித் திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.
2. இக்கடனுதவித் திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக இந்திய ஸ்டேட் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்களை கீழுள்ள இணைப்பில் காணமுடியும்;
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
07 மே 2022