12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று(07) ஆரம்பமானது.
15 முதல்19 வயது வரையான சிறுவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரையான பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட சிறுவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் சுமார் 30- ஆயிரம் சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு இணைவாக இதுவரை 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமைக்குக் கொண்டு வந்து அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.