September 28, 2023 4:06 am
adcode

விலை மதிக்க முடியாத 1500 ஆண்டுகள் பழமையான தங்க நாணய புதையல்!

விலைமதிப்பில்லா பொக்கிஷம் என வர்ணிக்கப்பட்டுள்ள 1500 ஆண்டுகள் பழமையான தங்க நாணய புதையலை ஸ்பெயின் கடல் பகுதியில் 2 நீச்சல் வீரர்கள் நீச்சலின் போது கண்டுபிடித்துள்ளனர்.

லூயிஸ் லென்ஸ் பார்டோ (Luis Lens Pardo), செசார் கிமனோ (César Gimeno Alcalá) என்ற சகோதரர்கள், ஸ்பெயின் சுற்றுலா கடல் பகுதியான சாபியாவில் தங்கள் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க‌ சென்றனர். இருவரும் அந்த கடல் பகுதியை சுத்தப்படுத்தும் நோக்கில், கடலின் ஆழ் பகுதியில் நீந்திய போது ஒளி சுடரை கண்டனர். அருகில் சென்று பார்த்த போது பழங்கால தங்க‌ நாணயம் என்பதை அறிந்தனர் அங்கிருந்து 8 தங்க நாணயங்களை எடுத்தனர். அவற்றை ஆய்வு செய்ததில், நாணயத்தில் கிரேக்க, ரோமானிய முகம் அச்சிடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தொல்பொருள் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் துறையினர் கடல் சாகச வீரர்கள் உதவியுடன் நாணயம் எடுக்கப்பட்ட ஆழ்கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கிபி 364 முதல் 408ம் ஆண்டு காலத்தின் 53 தங்க நாணய குவியலை கண்டறிந்தனர்.

Share

Related News