October 2, 2023 10:47 pm
adcode

1600க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்தன: புதிய அப்டேட்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன் மூலம் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் 2022 டிசம்பர் 12 முதல் 18 வரை மூடப்படும். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்தில் உள்ள கோழிக்கறி கடைகளுக்கு இந்த மூடல் பொருந்தாது என கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பணிப்புரையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இறந்த கால்நடைகள் மற்றும் ஆடுகளை மனித நுகர்வுக்கு விற்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின.

இதன்மூலம், இவ்வாறான முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1600க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி மாடுகள் மற்றும் ஆடுகள் உட்பட மொத்தம் 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Related News