2023 ஆம் ஆண்டிற்கான தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு, 1 யூனிட் மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவாகும் என CEB மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய சராசரி கட்டணம் ரூ. 29.14 என்றும் பற்றாக்குறை ரூ.423.5 பில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மின்சாரம் பயன்படுத்துவோரின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ. 56.90/- வசூலிக்கப்பட வேண்டும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
கீழ் அடுக்குகளுக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது மற்றும் மேல் அடுக்கு மானியத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்ய ஒரு யூனிட்டின் சராசரி செலவை விட அதிகமாக செலுத்துகிறது, மேலும் மீதமுள்ள மானியம் கருவூலத்தால் ஏற்கப்படுகிறது என அமைச்சர் மேலும் கூறினார்.
“எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ. 56.90/- மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகையாக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.