திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்துக்கு அருகே 8.67 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பில் உள்ளது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா.
இது கடந்த 2015 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகும். இங்கு இளநிலை ஆராய்ச்சியாளர்களால் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு நிலை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது.