October 3, 2023 12:30 am
adcode

28 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்ட கப்பல் இலங்கை துறைமுகத்தில்.

28 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்டுவரும் கப்பல் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

மின்னுற்பத்திக்குத் தேவையான டீசலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கடந்த 5ம் திகதியிலிருந்து முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக  குறிப்பிட்ட அமைச்சர் ,நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருளுக்கான நீண்ட வரிசையோ, மின்துண்டிப்போ இடம்பெறாது என்றும் அமைச்சர் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில் மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.

Share

Related News