June 10, 2023 10:44 pm
adcode

4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன்(I.M.F) கலந்துரையாடல்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் 10 ஆம் திகதி கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போதே நிதி அமைச்சர்   இதனை தெரிவித்துள்ளார்.

Share

Related News