பல அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்கங்கள் புதிய தனிநபர் வருமான வரிக்கு (APIT) எதிராக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளன.
அத்தியாவசிய சேவைகள் துறையின் ஏறக்குறைய 40 தொழிற்சங்கங்கள் 2023 பெப்ரவரி 08 புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த துறைமுக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் அழைப்பாளர் நிரோஷன கோரகனா தெரிவித்தார்.
பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், நீர் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதே தினத்தில் தாங்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
குறித்த வரிக் கொள்கையை அரசாங்கம் திருத்தத் தவறினால் தாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.