லொட்டரியில் 40 மில்லியன் டாலர்களை வென்ற பெண் ஒருவர் பற்றிய செய்தி ஆஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளது.
விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜாக்பாட் லொட்டரியில் பெரும் தொகையை வென்றுள்ளார்.
இதற்கிடையில், வெற்றி குறித்து தனக்கு வந்த முதல் அறிவிப்பை தான் நம்பவில்லை என்றும், இது ஒரு மோசடி அழைப்பு என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண், வெற்றி பெற்ற பணத்தில் அடமானக் கடனை செலுத்துவதாக மேலும் கூறியுள்ளார்.
மேலும் தனது வேலையை விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவேன் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டிலேயே அதிக வெற்றி பெற்ற லொத்தர் இதுவென வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.