September 30, 2023 8:55 am
adcode

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் Covid-19 தடுப்பூசி — சுகாதார அமைச்சு

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் Covid-19 தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு Covid-19 தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Covid-19 தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு Covid-19 தொற்றுடன் தொடர்புபட்ட வேற  வகையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்;, இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும்; சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Related News