April 1, 2023 12:53 am
adcode

74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்.

74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று (29) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைவாக சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை, நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் பல வீதிகளில் இடைக்கிடையே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Related News