“இது முழுப் பொய், நான் ஒரு நோயாளியைப் பார்க்க மருத்துவமனைக்குக் கூட செல்லவில்லை, நான் உடல் தகுதியுடன் இருக்கிறேன், இன்றும் இந்த இளைஞர்களுடன் ஓட முடியும்” என்று நெத் எஃப்எம் ரேடியோவிடம் பேசிய பிரதமர் கூறினார்.
புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளதோடு, பல்வேறு கொள்கைகள் காரணமாக அது இயங்காது எனக் கூறினார்.
“எந்தவொரு பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ கூட வேலை செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள், சர்வகட்சி அரசாங்கம் இருந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.