June 10, 2023 11:46 pm
adcode

அறிவிக்கப்பட்ட படி லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கவில்லை.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்னும் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இம்மாதம் கடந்த 12 ஆம் திகதி முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25) முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

எனினும், கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் எரிவாயு விநியோக முனையம் இன்று (25) உள்நாட்டு எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Related News