நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அதன் செயலாளர் திரு.ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதில் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் பங்கேற்பார்கள் என்றும், இதற்கு அனைத்து மருத்துவ தொழில் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறினார்.