பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்கு சம்மேளனம் (IUBF) இன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
IUBF விகாரமஹாதேசி பூங்காவில் இருந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்து காலி முகத்திடலை நோக்கி சென்றது.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் வீதிகள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை அகற்றி முன்னோக்கிச் சென்றனர்.