புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளனர். இதுவரையில் 4 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று(16) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.