பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த 07 அம்ச கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தால் புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவை வழங்குவோம் என எம்.பி.க்கள் பல விடயங்கள் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கடிதத்துக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பில், பெரும்பான்மை கருத்துடன் உடன்படுவதாகவும், ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதில் கடிதத்தை முழுமையாக இங்கு தருகின்றோம்.