பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் என்ற வதந்தியை மறுத்துள்ள தோஹாவை தளமாகக் கொண்ட ALBG வர்த்தக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு பிறந்த பி.டபிள்யூ.எம். நாமல் ராஜபக்ஷ என்ற நபர் இந்த அமைப்பின் நிதிப் பணிப்பாளராக கடமையாற்றியதாகவும், ஆனால் அவர் அந்த நிறுவனத்தில் தற்போது பணிபுரிவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ என்ற அவர்களது கடந்தகால ஊழியர் இலங்கையில் உள்ள ஜனாதிபதி ராஜபக்சவின் குடும்பத்தில் உறுப்பினராக இல்லை என்று நிறுவனம் மேலும் வலியுறுத்துகிறது.