கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அண்மித்த பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நாளை (08) மற்றும் சனிக்கிழமை (09) அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தடை உத்தரவை கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலங்கை BAR சங்கத்தின் (BASL) தலைவர் உட்பட சட்டத்தரணிகள் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக ஆஜராகியிருந்தது.
இதேவேளை, நேற்று (06) பிற்பகல் ஒல்கொட் மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு திருத்தப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்ற உத்தரவு படி, மதகுருமார்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.