June 11, 2023 12:01 am
adcode

‘கோடாகோகம’ நீக்கம்: நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது என்ன?

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள அனுமதியற்ற கூடாரங்கள் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அங்கீகரிக்கப்படாத கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் A G உறுதியளித்தார்.

காலிமுகத்திடல் போராட்ட களம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து “கோடாகோகம” போராட்டத் தளத்தின் கீழ் காலி முகத்திடலிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல கட்டமைப்புகள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும், பொலிசார் அறிவித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் “கோடகோகம’ தளத்தில் பல கட்டமைப்புகளை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

புதன் கிழமை, “கோடாகோகம” எதிர்ப்பாளர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளை காலி செய்வதற்கு வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த பிரபலமான கூடாரமான  ‘கோடாகோகம’ நூலகம் இன்று அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Share

Related News