September 28, 2023 3:06 am
adcode

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த வதிவிட பயிற்சிப்பாசறை

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த வதிவிட பயிற்சிப்பாசறை

.

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் அதிபர் தினேஷ் தலைமையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

.

கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் இணைப்பாடவித செயற்பாடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தரம் 06 -09வரையிலான மாணவர்களுக்கு இப்பாசறை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

.

பாசறையின் இறுதிநாள் நிகழ்வுக்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சகுந்தலா அவர்கள் கலந்துசிறப்பித்தது மட்டுமன்றி ரோயல் கல்லூரியில் இல்லாத சந்தோஷத்தை இங்கே நான் உணர்கிறேன் எனக்கூறியமை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.

பின்த் அமீன் -மாவனல்லை

.

படங்கள்

Share

Related News