சிறுவர் தின நிகழ்வு
இ/கலபொட தமிழ் வித்தியாலயத்தில் 2022.10.12ம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இன்னோரன்ன போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் பரிசாக அளிக்கப்பட்டமை எல்லோராலும் வரவேற்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவரும் பூக்கொத்து வழங்கப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது மட்டுமன்றி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி , மரவள்ளிக்கிழங்கு அவித்து சம்பல் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மிக மகிழ்வாக அமைந்த இச்சிறுவர் தினம் அதிபர் தினேஷ் தலைமையில் ஆசிரியர்களால் அழகாய் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்த் அமீன்
படங்கள்