March 23, 2023 5:44 pm
adcode

9A பெற்ற சிறுவனை தீ வைத்து எரித்த சந்தேக நபர் கைது!

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (29 ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

போதைக்கு அடிமையான ஒருவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

முதற்கட்ட விசாரணைகளின்படி, மாணவன் சனிக்கிழமை (26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பியபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கையில் தீபத்தையும், மண்ணெண்ணெய் பாட்டிலையும் வைத்திருந்த குறித்த நபர் மண்ணெண்ணெய் மற்றும் தீபத்தை பாதிக்கப்பட்டவரின் திசையில் வீசியதாக கூறப்படுகிறது.

 

17 வயதுடையவரின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

Share

Related News