September 26, 2023 10:01 pm
adcode

பல்கலைக்கழகங்களளில் இடம்பெறுகின்ற பகிடிவதை சட்டத்தில் திருத்தம்!

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share

Related News