இலங்கை மத்திய வஙகியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் தேசிய நலனாக இணைந்து செயல்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.