இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 எரிவாயு தொடர்பான வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
நேற்று முதல் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்படவில்லை என LAUGFS எரிவாயு தெரிவித்துள்ளது.