September 26, 2023 8:54 pm
adcode

கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு அழைப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்.

அரச சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு அழைப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண்களை அலுவலங்களுக்கு அழைக்காமல் வீடுகளில் இருந்து பணியினை மேற்கொள்வதற்கான சுற்றறிக்கையை வெளியிடுதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அரச நிர்வாக செயலாளர் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோன்று ஏனைய அரச ஊழியர்களையும் இரண்டு கட்டங்களின் வாரத்தில் 3 நாட்களுக்கு சேவைக்கு அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஒளடத ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஒட்சிசனை கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவுவது தொடர்பாக இன்று நிதி அமைச்சின் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதுடன் தற்போதைய வேலைத்திட்டங்களை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த துறையில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, எந்த சவால்களில் இருந்தும் பின்வாங்காது முன்னோக்கி செயற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Share

Related News