September 30, 2023 8:05 am
adcode

Covid 19 வேகமாக பரவி வருவதனால், இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்!

தற்போது கொவிட் வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்.

அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை அணிவதும் மிக முக்கியம் என்று ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே  தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்கள் தடுப்பூசியின் வகையை பொருட்படுத்தாமல், நாட்டில் கிடைக்கின்ற ஏதாவது ஒரு வகையான தடுப்பூசியை, அருகிலுள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Share

Related News