September 28, 2023 4:17 am
adcode

Covid-19 வைரஸால் பாதிக்கப்பட்ட, இவ்வருடம் பரீட்சைகள் எழுதவுள்ள மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விசேட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும்

Covid-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், வீட்டிற்கும் பரீட்சை எழுதும் மத்திய நிலையத்திற்கும் இடையில் அதிக தூரம் காணப்படுமிடத்து, அவ்வாறானவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விசேட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என்று குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share

Related News