நம் நாட்டின் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடிகளுள் ஒருவரான தெல்தோட்டை மண் ஈன்றெடுத்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் இலக்கிய உலகுக்கு செய்த அரும்பணிகள் பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் நினைவுப் பேருரையொன்றை நடாத்த தெல்தோட்டை ஊடக மன்றம் திட்டமிட்டுள்ளது.
நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரை – 2021 எனும் தலைப்பில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (Zoom) இந்நினைவுப் பேருரை இடம்பெறவுள்ளது. நினைவுப் பேருரையினை பேராதெனிய பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறைத்தலைவர் பேராசிரியர் (கலாநிதி) எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய பல்வேறு ஆக்க இலக்கிய கலைப் படைப்புகளையும், ஆவணங்களையும் உலகறியச் செய்த பந்நூல் ஆசிரியர் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தெல்தோட்டை ஊடக மன்றம் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.
- Meeting ID: 885 5375 1703
- Passcode: rq3
எஸ்.ஏ.எம். பவாஸ்,
செயலாளர்,
தெல்தோட்டை ஊடக மன்றம்.