September 30, 2023 9:46 am
adcode

FIFA உலகக் கோப்பை 2022 : 7 அணிகள் இறுதி-16 சுற்றுக்கு தகுதி, 5 அணிகள் வெளியேற்றம்

FIFA உலகக் கோப்பைக்கான குழு நிலை போட்டிகள் அதன் இறுதிச் சுற்றை நெருங்கியுள்ள நிலையில் ஏழு நாடுகள் ஏற்கனவே இறுதி-16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

பிரான்ஸ் அணி தனது இரண்டாவது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இவ் உலகக் கிண்ணத்தில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. அதனை தொடர்ந்து பிரேசில் அணி கேஸேமிராவின் கோல் உதவியோடு சுவிற்சர்லாந்து அணியை 1-0 என வீழ்த்தி அடுத்த சுற்றில் தன் இருப்பை உறுதிப்படுத்தியது. போர்த்துக்கல் அணி உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

2-0 என்ற கோல் கணக்கில் ஹோஸ்ட் கத்தாரை வென்றதன் மூலம் நெதர்லாந்து இறுதி 16 இல் தனது இடத்தைப் பாதுகாத்தது, அதே நேரத்தில் செனகல் 2-1 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்தி இறுதி 16 இல் குழு A இலிருந்து தெரிவானது. குழு B இலிருந்து, இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை தோற்கடித்தது, மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மற்றும் பில் ஃபோடன் ஆகியோர் கோல் அடித்து குரூப் பி டாப்பராக இங்கிலாந்து தகுதி பெற்ற அதே நேரத்தில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி பி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக தெரிவானது.

இறுதி-16 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்: பிரான்ஸ், பிரேசில், போர்த்துகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா

உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட அணிகள்: கத்தார், கனடா, ஈக்வடார், ஈரான், வேல்ஸ்

Share

Related News