2021 உயர்தர பரீட்சைக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட ஆலோசனை அடங்கிய சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தொகுதிக்கு பொறுப்பான அதிகாரிக்கு தமது பிரிவில் பரீட்சைக்காக இணைப்பு உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடக சிரேஷ்ட பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களுக்கு பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பேச்சாளர் கூறினார்.
இதேவேளை கொழும்பில் அமைந்துள்ள விடை பத்திரங்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களுக்கும் உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.