September 25, 2023 5:59 am
adcode

G.C.E O/L அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக, க.பொ.த சாதாரண தர இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் குறித்த காலத்தினுள் நடத்தப்படவில்லை. 

அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இன்றி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன.

இந்தப் பாடங்களுக்கு ஒரு இலட்சத்து அறுபத்தொன்பதாயிரம் விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Related News