June 11, 2023 12:19 am
adcode

G.C.E O/L பரீட்சையின் விடைத்தாள் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நேற்று(01) நிறைவடைந்தது.

விடைத்தாள் மதிப்பீடுப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதல் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீடுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

சவால்களுக்கு மத்தியில் இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. பரீட்சைகள் பற்றி சில முறைபாடுகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறினார். அந்த முறைபாடுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Share

Related News