October 2, 2023 11:52 pm
adcode

G.C.E O/L 2022 – பரீட்சைகளை எப்போது நடத்தப்படலாம் என்பது குறித்த அறிவிப்பு

2022 G.C.E O/L பரீட்சைகள் ஏப்ரல் இறுதியில் அல்லது 2023 மே முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2021 G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு`கருத்து தெரிவித்த அவர், பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் மொத்தமாக 74% சித்தியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

2021 O/L பரீட்சை தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் தனியார் துறையின் ஆதரவுடன் இந்தப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Related News