September 28, 2023 3:16 am
adcode

தெல்தோட்டையின் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களை ஒன்றிணைக்கும் HESAD அமைப்பின் இரண்டாவது பொதுக்கூட்டம்.

HESAD அமைப்பின் இரண்டாவது பொதுக்கூட்டம் 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் எனசல்கொல்ல மத்தியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

 

குறித்த பொதுக்கூட்டமானது

 

சிறந்த கலந்தாலோசனைகள் மூலம் HESAD அமைப்பின் எதிர்க்காலத்தை வடிவமைத்தல் மற்றும் வளமூட்டல்

 

என்ற கருப்பொருளில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

HESAD அமைப்பானது உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் தெல்தோடை பிரதேசத்தில் உள்ள  அனைத்து மாணவர்களையும் ஒன்றினைத்து கல்வி, திறமை, ஆற்றல் மற்றும் ஆன்மீகம் போன்ற இன்னோரன்ன பல துறைகளில் தம்மால் ஆன பங்களிப்பை தெல்தோட்டை பிரதேசத்தினுள் வழங்க ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

உமது ஒத்துழைப்பே HESAD அமைப்பின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சாணியாய் அமையும், எனவே குறித்த பொது கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களையும் அன்பாய் வரவேற்கின்றோம்.

 

எம். என்.எம் ஸல்மான் பாரிஸ்,

செயலாளர்,

Higher Education Students’ Association of Deltota (HESAD)

Share

Related News