படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கான அழைப்பு
முக்கிய கவனத்திற்கு ……………………………..
தற்போதிருக்கும் தொற்றுநோய் நிலைமை காரணமாக உரிய பரிந்துரைகள் மற்றும் அனுமதிகளை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் தங்களது விண்ணப்பப்படிவத்தை தாங்களாகவே தயாரித்து தங்கள் கையொப்பத்துடன் பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தபாலூடாக அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். எனினும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் போது முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பத்திலும் இத் தொற்றுநோய் நிலைமை தொடர்கிறது எனின் இறுதியாக பணியாற்றுவதற்காக நியமனம் செய்யப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரதி ஒன்றையேனும் சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் எதிர்வரும் நாட்களில் நிலவும் தொற்றுநோய் நிலைமைகளிற்கேற்ப நேர்முகப் பரீட்சையானது தொலைவு செயன்முறையை உபயோகப்படுத்தி மெய்நிகர் முறையாகவும் நடைபெறலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.
மின்னஞ்சல் முகவரி-infosmoer@gmail.com
தங்களது விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்கும் போது மேற்கூறிய இரு முறைகளில் எந்த முறையையேனும் உபயோகிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 06 ஆகஸ்ட் 2021