கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரவே நாம் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் Marburg virus பாதிப்பால் கினியா நாட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியா நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவில் கடந்த ஜூலை 25ஆம் திகதி ஒருவருக்கு அதி தீவிரமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் பாதிப்பு இருந்தமை உறுதி செய்யப்பட்டது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. இது சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த மார்பர்க் வைரஸ் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. எபோலா மற்றும் கொரோனா வைரசைப் போலவே இதுவும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். ஆனால் அந்த இரண்டு வைரசுகளைவிட இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த மார்பர்க் வைரசால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 88% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது கொரோனாவை போன்ற வேகமாகப் பரவும் அதேநேரம் எபோலாவை போன்ற கொடூர பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
இந்த மார்பர்க் வைரஸ் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. எபோலா மற்றும் கொரோனா வைரசைப் போலவே இதுவும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். ஆனால் அந்த இரண்டு வைரசுகளைவிட இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த மார்பர்க் வைரசால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 88% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது கொரோனாவை போன்ற வேகமாகப் பரவும் அதேநேரம் எபோலாவை போன்ற கொடூர பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து ஒரு மனிதருக்குப் பரவிய பின்னர், அவரிடம் இருந்து பலருக்கும் பரவும் ஆற்றல் கொண்டது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் உமிழ் நீர், வியர்வை ஆகியவை மூலம் மற்றவர்களுக்குப் பரவும். ஒருவர் வௌவால்கள் அதிகம் இருக்கும் குகை அல்லது சுரங்கம் போன்ற இடங்களில் அதிக காலம் இருக்கும்போதுஇ அவர்களுக்கு இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு
இந்த மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட 5 முதல் 10 நாட்களுக்குப் பிறகு திடீரென ஒருவருக்குக் காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படும். அதேபோல இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான உடல் வலியும் ஏற்படும். குமட்டல், வாந்தி, மார்பு வலி, தொண்டைப் புண், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்றாம் நாளில் இருந்த ஏற்படத் தொடங்கும். இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, உடல் எடை இழப்பு, மயக்கம், கல்லீரல் செயலிழப்பு, போன்ற தீவிரமான அறிகுறிகளும் ஏற்படும்.
இதுவரை, மார்பர்க் வைரசுக்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. அதேநேரம் மருத்துவச் சிகிச்சை, ஆக்சிஜன் நிலையை முறையாக வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைப் பராமரிப்பது போன்றவை மூலம் உயிரிழப்புகளைத் தடுக்கலாம். கொரோனா வைரசை போலவே இதற்கும் முறையான சிகிச்சை இல்லை. அதேநேரம் இது கொரோனாவைவிட பல மடங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் உலக சுகாதார அமைப்பு இது பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கினியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.